Sunday 16 December 2018

Saurashtra land mentioned Vikramaathithan bethal story - விக்ரமாதித்தன் பெதாள் கெனீம் சௌராஷ்ட்ரா தேஷ்

விக்ரமாதித்தன் கதையில் சௌராஷ்த்ர தேசம் :
விக்ரமாதித்தன் பெதாள் கெ2னீம் சௌராஷ்ட்ரா தேஷ் 
9 (2) அநங்கரதி கெனி - அநங்கரதி கதை 


விக்ரமாதித்தன் மறுபடியும் முருங்கை மரத்தில் இருந்து வேதாளத்தை பிடித்து வரும்போது வேதாளம், " ராஜனே ! இரவு வேளையில் இவ்விதம் மயானத்தில் அலைந்து திரிவது அரச பதவிக்கு ஏற்றதல்ல. பூதங்கள்  நிறைந்த இவ்விடம் நள்ளிரவில் பிணப் புகை சூழ்ந்து பயங்கரமாக விளங்கவில்லயா சூழ்நிலை ? அந்த மந்திரவாதியை திருப்திப்படுத்த நீ ஏன் இவ்வளவு துயரம் விடாப் பிடியாக என்னை மீண்டும் மீண்டும் தூக்கி செல்கிறாய்? உன் பிடிவாதத்ததை விடமாட்டாய் .  அதனால் உனது வழிநடைப் பயணத்தை சுலபமாக்க மீண்டும் ஒரு கதை சொல்கிறேன், கதை முடிந்ததும் கேள்வி கேட்பேன், அதற்க்கு பதில் கூறாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என்று கதையை  ஆரம்பித்தது வேதாளம். :
அவந்தி தேசத்திலே ஒரு நகரம் இருக்கிறது.  கிருத யுகத்திலே அதற்க்கு பத்மாவதி நகர் என்ற பெயரும், திரேதா யுகத்திலே போகவதி நகர் என்ற பெயரும், துவாபர யுகத்திலே ஹிரண்யவதி நகர் என்ற பெயரையும் கொண்ட பழையமையான நகரம் அது.   இந்த கலி யுகத்திலே உஜ்ஜைனி என்று அந்த நகருக்கு பெயர் .  அந்த உஜ்ஜைனி நகரை வீரத்தேவன் என்றொரு ராஜா ஆண்டு வந்தான் .  அவன் மனைவி பத்மாவதி.  அவன் மனைவி பத்மாவதி தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று மந்தாகினி  நதிக்கரை  அடைந்து பரமசிவனை நோக்கி தவம் செய்தாள் .
நீண்ட கால தவத்திற்கு பிறகு ஒருநாள் சிவபெருமான் அசரீரியாக பின்வருமாறு வரம் தந்தார் : " அரசியே, ! உன் வம்சத்தை காக்க ஓர் ஆண் மகனும், தேவலோகத்து அப்சரஸ் ஸ்த்ரீகளையும் தோற்கடிக்கும் அழகுள்ள ஒரு பெண் குழந்தையும் பிறக்கும் " என்றார் .  இதை கேட்ட அரசி தன்  ஆசை நிறைவேறியதற்கு சந்தோஷப்பட்டு உஜ்ஜையினி திரும்பினாள்.
பின்னர் அவளுக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  சூரத்தேவன் என்று அக்குழந்தைக்கு பெயரிட்டனர் .   பின்னர் அழகு வாய்ந்த பெண் குழந்தை பிறந்தால் .  அவளுக்கு அநங்கரதி என்று பெயரிட்டனர்.
அவள் வளர்ந்து யௌவன பருவம் அடைந்ததும் அவளுக்கு ஏற்ற கணவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆவலில் ராஜா வீரத்தேவன், பூலோகத்தில் உள்ள இளவரசர்கள் ஓவியங்களை திரைசீலையில் வரைந்து அவளிடம்  காண்பித்தான்.யாருடைய உருவமும் அவளின் அழகுக்கு பொருந்தியதாக  இருக்கவில்லை.அதனால் ராஜா தன்  குமாரத்தி அநங்கரதியை அழைத்து....... , " உனக்கு ஏற்ற கணவனை  தேர்ந்தெடுத்து கொள் " என்று   கூறி விட்டார் .
இதை கேட்ட அநங்கரதி " அப்பா ! சுயம்வரம் நடத்த வேண்டாம் , எனக்கு வெட்கமாக இருக்கிறது, எனக்கு வரும் கணவர் பார்வைக்கு அழகான இளைஞனாக இருக்க வேண்டும் , மேலும் ஏதாவது ஒரு வித்தையில் வல்லவராக இருக்க வேண்டும் , வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை " என்று கூறி விட்டாள் .  
ராஜாவும் அதே போல உள்ள மாப்பிள்ளையை தேட ஆரம்பித்தார்.  அப்போது நான்கு திசைகளில் இருந்து நான்கு இளைஞர்கள் ராஜாவை அணுகினர்.  நால்வரும் ராஜகுமாரியை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.  நால்வரும் திறமைசாலிகள்,  ஒவொவொருவரும் ஒவொவொரு வித்தையில் தனித்த திறமை வாய்ந்தவர்கள் .  குறிப்பிட்ட நாளில் நால்வரும் ராஜா  மற்றும் ராஜகுமாரி முன்னிலையில் தங்களது தனித்த திறமைகளை எடுத்து கூறினர் .
முதலாமவன் மேற்கு திசையில் இருந்த சௌராஷ்ட்ரா தேசத்தில் இருந்து வந்தவன் என்றும் தன் பெயர் பஞ்சபட்டகார் என்றும் கூறிக் கொண்டான்.   தினந்தோறும்  நான்  ஐந்து புட்டா கொண்ட ஐந்து ஜதை  துணிகளை நெய்வேன்.  ஒன்றை என் குல தெய்வத்திற்கும், இரண்டாவதை ஒரு அறநெறியாளருக்கும் கொடுப்பேன். மூன்றாவதை நான் அணிந்து கொள்வேன். மீதி  இரண்டை விற்பேன்.  இந்த கன்னிகையை நான் மணந்தால் நான்காவது துணியை அவளுக்கு கொடுத்து விட்டு ஐந்தாவதை விற்று வாழ்க்கை நடத்துவேன் என்றான்.  
அவன் முடித்தவுடனுன், இரண்டாமவன் கூறினான் : " நான் ஒரு வியாபாரி , தென் திசையில் இருந்து வருகிறேன்.  பாஷக்ஞன் என்பது என்  பெயர்.  பல மொழி வல்லவன்.  எனக்கு பறவை மிருகங்களின் மொழிகள் கூட தெரியும்.  ஆதலால் எந்த ஊருக்கு சென்றாலும் என்னால் பிழைக்க முடியும் என்றான்.  
மூன்றாமவன் " கட்கதரன் என்ற போர் வீரன் நான்.  புஜபல பராக்கிரமம் வாய்ந்தவன்.  வாள் வித்தையில் எனக்கு சமமானவன் உலகத்திலேயே யாரும் கிடையாது , எனவே எனக்கு அரசகுமாரியை கல்யாணம் செய்து தாருங்கள் என்றான்.
நாலாமவன் கூறலானான் " என் பெயர் ஜீவதத்தன் என்னும் பிராமணன்.  கிழக்கு திசையில் இருந்து வருகிறேன் .  மந்திர வித்தையில் வல்லவன்.  இறந்தவர்களை கூட என்னால் உயிர்ப்பிக்க முடியும் .   எத்தனையோ அற்புதங்களை நான் நிகழ்த்தி இருக்கிறேன் , ஆகையால் அரசகுமாரியை எனக்கு கல்யாணம்  செய்து தாருங்கள் " என்றான்.
இதனை கேட்ட ராஜா வீரத்தேவன் திகைத்து போனான் .  அவர்கள் நால்வரும் ஆடையிலும் உருவத்திலும் ஒரே மாதிரியான அந்தஸ்து கொண்ட தேவ குமாரர்கள் போல இருப்பதை கண்டு என்ன செய்வது என்று விளங்காமல் விக்கித்து திகைத்து நின்றான். 
அநங்கரதியோ அந்த நால்வருள் ஒருவனை தனக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டாள் .  
இவ்விதம் கதை சொல்லிய அந்த வேதாளம் " ஓ விக்ரமாத்தித ராஜனே , அந்நால்வருள் யாருக்கு அநங்கரதியை கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் ? என்று கேள்வி கேட்டது.
அதற்க்கு விக்ரமாத்தித்தன் பின்வருமாறு விடையளித்தார் . " அரச குலத்தை சேர்ந்த அநங்கரதியை துணி நெய்பவனுக்கு எப்படி கல்யாணம் செய்து கொடுக்க முடியும் ? அவன் தினந்தோறும் ஐந்து ஜதை துணி நெய்வதால் என்னே விஷேஷ பிரயோஜனம் ? அவளை வியாபாரிக்கு மணம் முடிக்க முடியுமா ? மிருக பாஷை தெரிந்திருந்தால் என்ன பயன் ? பிராமண குலத்தவனுக்கும் கொடுக்க இயலாது .. மந்திரவாதியாகி தனது பிராமண குல தர்மத்தில் இருந்து அவன் விலகிவிட்டவன்.  எனவே ராஜகுமாரியின் அதி அழகை வாள் முனையில் காக்கும் போர்வீரன் கட்கதரனுக்கே அநங்கரதியை கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார்.  பதிலை கேட்ட வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி தொங்க துவங்கியது.


No comments:

Post a Comment